ஐ.நா. தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பு மாநாடு இன்று தொடக்கம்

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார்.

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார். 



கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயவும், மாணவர்களுக்கு எதிராக மாணவர்களிடையே நடக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், எதிர்கால சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்க வழிவகை செய்வதற்கேற்ப விளக்கமளிக்கப்படுகிறது. 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயமாகத் திகழும் மாணவர்களின் முயற்சியால், இந்த மாதிரி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நாட்டின் வருங்கால முன்னோடிகளுக்குள் இப்படி ஒரு எழுச்சிமிகு கூட்டமைப்பை ஏற்பாடு செய்து, அதை இவ்வளவு அழகாக வழி நடத்திச் செல்வதைக் காணும் போது வியப்பாக உள்ளது. மாதிரி கூட்டமைப்பு மாநாட்டின் விவாதங்களின் மூலம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...