கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சீமான், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தனர். மண்டபத்தில் உள்ளவர்களை விடுவிக்கக்கோரிப் போராடிய அரூண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்து மேடவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்களை 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி, நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகப் போராடி, கைதானவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.