65-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் படமாக டூ லெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு தேர்வு செய்த விருதுகளின் பட்டியலை தேர்வுக்குழு தலைவர் சேகர் கபூர் டெல்லியில் அறிவித்துள்ளார். இதில், சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்தப் படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சிறப்பு பிரிவில் பார்வதி மேனன், நடிகர் பங்கஜ் திரிபாதிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை பார்வதி மேனன், மலையாளத்தில் சிலபஸ் என்ற படத்தின் மூலம் 2006 ஆண்டு அறிமுகமானார். தொடர்ந்து, நோட் புக், பெங்களூர்ஸ் டே, என்னு நிண்டே மொய்தீன், சார்லி, டேக் ஆப் உள்பட பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். தமிழில் பூ மற்றும் உத்தம வில்லன், மரியான் படங்களில் நடித்து உள்ளார்.
சிறந்த படமாக பகத் பாசில் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாட்சியும், சிறந்த இந்திப்படமாக நியூட்டனும், சிறந்த தமிழ் படமாக டூ லெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பாகுபலி-2, சிறந்த கன்னட படம் - ஹெப்பட் ரமாகா, சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை, மாம் (பின்னணி இசை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.