'சுத்தமான கழிப்பறை இல்லாததால், தண்ணீர் குடிக்காமல் கல்வி பயிலும் அவலம்' - அரசு கல்லூரி மாணவிகள் வேதனை

கோவை : கோவை அரசு கலை கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வரும் நிலையில், பெண்களுக்கென சுத்தமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் தினம்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.


கோவை : கோவை அரசு கலை கல்லூரியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வரும் நிலையில், பெண்களுக்கென சுத்தமான கழிப்பறை வசதி இல்லாததால் மாணவிகள் தினம்தோறும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அரசு மருத்துவமனையை ஒட்டி அமைந்துள்ள கோவை அரசு கலை கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கென இரண்டு கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அவற்றில் ஒரு கழிப்பறையை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் சங்கத்தினர் முறையாகப் பராமரித்து வருகின்றனர். 

ஆனால், மற்றொரு கழிப்பறையிலோ தண்ணீர் கூட வருவதில்லை, மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நேப்கின்களை அப்புறப்படுத்த எந்தவொரு வசதியும் இல்லை என மாணவிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.



'பெண்களுக்கான இரண்டு கழிப்பறைகளில் ஒன்றை மட்டுமே பெரும்பாலான மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் சுத்தமில்லாத கழிப்பறையையும் பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும். ஆனால் அதில் தண்ணீர் வருவதில்லை, குவளைகள் கிடையாது, நேப்கின்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட அருவருப்பான சுகாதாரமில்லாத கழிப்பறையை பயன்படுத்துவதைத் தவிர்க்க பெரும்பாலான மாணவிகள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்துவிடுவதாக கூறுகிறார் மாணவி அகிலா சண்முகம்.

கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும், மலைப்பகுதிகளிலிருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் அரசு கலை கல்லூரியில் பயின்று வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து சேரும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பெரும் அவதிகளைச் சந்தித்து வருவதாக வேதனையோடு கூறுகின்றனர்.

இதே கல்லூரியில் ஏராளமான ஆசிரியைகளும் கல்விப் பணி செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கென அந்தந்த துறைகளுக்கு அருகிலே கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அதை 'ஆசிரியைகளுக்கு மட்டும்' என்று கல்லூரி நிர்வாகம் பூட்டிவைத்து சுத்தமாகப் பராமரித்து வருவதாகவும் மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

பல தடைகளை தாண்டி கல்வி பயில வரும் மாணவிகள், கழிப்பறையைக் காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது. இதனைத்தடுக்க கல்வி நிறுவனங்கள், மாணவிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...