கால்நடைகளுக்கு அடையாளக் குறியீடு வழங்குவதற்கான முகாம்

நீலகிரி : உதகை நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு அடையாள குறியீடு வழங்கும் முகாம் வரும் 17-ம் தேதி நடக்கிறது.

நீலகிரி : உதகை நகரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளுக்கு அடையாள குறியீடு வழங்கும் முகாம் வரும் 17-ம் தேதி நடக்கிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களில் வந்து சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர். நகரில் உள்ள சாலைகள் மிக குறுகலானது என்பதால் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படும். அவ்வப்போது, வீடுகளில் வளர்க்கப்படும் மாடு, ஆடுகள், குதிரைகள் போன்ற கால்நடைகள் உதகை நகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. அதுமட்டுமின்றி, சாலைகளின் நடுவே நின்று கொண்டும், படுத்து கொண்டும் இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதித்தாலும், கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவது தொடர் கதையாகவே உள்ளது.

தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், உதகை நகரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், கால்நடைகள் சாலைகளில் உலா வருவதைத் தடுக்க மாவட்ட காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வரும் 17-ம் தேதி காந்தள் முக்கோணம் பகுதியில் உள்ளூர் மக்கள் வளர்க்கும் குதிரை, மாடு போன்ற பிராணிகளுக்கு அடையாள குறியீடு வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு, அடையாள குறியீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா அறிவித்துள்ளார். மேலும், அடையாள குறியீடு வாங்காத கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...