தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கு : இருவருக்கு ஆயுள்தண்டனை

கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கோவையில் தனியார் நிறுவன மேலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவை பீளமேடு பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. தனியார் நிறுவன மேலாளரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த போது மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளைச்சாமி என்பவர் முதலில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த அவர் தலைமறைவானார். தொடர்ந்து சத்தியமூர்த்தியின் ஓட்டுநரான விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளிகள் விக்னேஷ் மற்றும் ஜெயராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டணை மற்றும் ரூ. 10, 000 அபராதம் விதித்து நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...