தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகங்களில் ஈடுபட வேண்டாம் - சி.பி.ஐ.எம் வலியுறுத்தல்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகங்களில் ஈடுபட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகங்களில் ஈடுபட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு அமைக்க மோடி அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. 

தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. தமிழக மக்களுக்கு விரோதமாக ஆளுநரும் செயல்பட்டு வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தீக்குளிப்பு போன்ற உயிர் தியாகம் செய்யும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட வேண்டாம்." என்று அவர் பேசினார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...