பிரதமருக்கு புறா தூது, கருப்பு பலூன்: கோவையில் தி.மு.க.வினர் கைது

கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா தூது மூலமாகவும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் நூதன போராட்டம் நடத்திய தி.மு.க-வினரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், இன்று தமிழகம் வரும் பிரதமரை  கண்டித்தும் தி.மு.க சார்பில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகர தி.மு.க சார்பில், நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க-வினர் கருப்பு பலூன்களை பறக்க விட்டனர். இதையடுத்து கருப்பு பலூன்களை பறக்கவிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உக்கடம் கோட்டை மேடு பகுதியில் மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில், புறா தூது மூலம் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 5 புறாக்களும், கருப்பு பலூன்களை பறக்க விடப்பட்டன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...