நீலகிரியில் நலிவடைந்த அரசுப் பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியர்கள்

நீலகிரி: ஆங்கில கல்விக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாமல் நலிவடைந்து மூடப்படும் சூழலுக்கு சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மீண்டு புது பொலிவுடன் தரம் உயர்ந்துள்ளது.

நீலகிரி: ஆங்கில கல்விக்கு இணையாக ஈடு கொடுக்க முடியாமல் நலிவடைந்து மூடப்படும் சூழலுக்கு சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மீண்டு புது பொலிவுடன் தரம் உயர்ந்துள்ளது.

நவீன காலத்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க விரும்புவது இல்லை. தரம் என்ற ஒற்றை வார்த்தை இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.

இந்த நிலைக்கு, நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த மார்லி மந்து ஓடைக்காடு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியும் தள்ளப்பட்டது. குறிப்பாக கடந்த காலங்களில் இப்பள்ளியில் சுமார் 300 முதல் 400 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், அனைத்து மாணவர்களும் இந்தப் பள்ளியை விட்டு தனியார் பள்ளிக்குச் சென்றனர். இதனால் இப்பள்ளி நலிவடைந்து மூடப்படும் சூழல் ஏற்பட்டது.



இதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி மட்டுமல்லாமல், பள்ளி கட்டிடத்தின் மோசமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததும் தான் என்று குற்றம் சாட்டப்பட்டது.

புதுப்பொலிவு

பள்ளியின் நிலை அறிந்து நல்லாசிரியர் விருது பெற்ற சோபா என்ற ஆசிரியர் சமீபத்தில் இந்த அரசுப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார். பின்னர், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளியின் கட்டிடங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், பூங்கா மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார்.



மேலும், பள்ளி வளாகத்தில் நாவல், விக்கி போன்ற பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்து பள்ளியை புது பொலிவடையச் செய்தார்.



மேலும், இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியையும், கணினி கல்வியையும் அறிமுகப்படுத்தி பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்தினார். இவரது முயற்சியால், 5-ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 40-ஆக அதிகரித்துள்ளது.



தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்தை அரசுப் பள்ளியாலும் தார முடியும் என்பதற்கு இந்த பள்ளி ஒரு சான்றாக விளங்குகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தரமான கல்வி மற்றும் அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுத்தால், அனைத்து அரசுப் பள்ளிகளும் புதுப்பொலிவு பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...