காலியாக உள்ள கால்நடை மருத்துவர் பணியிடம் : விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு

நீலகிரி : தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : தெப்பக்காடு யானைகள் முகாமில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளைப் பராமரிக்க வேண்டி கால்நடை மருத்துவர் பணியிடம் உள்ளது. இந்த பணியிடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பணியாற்றி வந்தார். 



அவர் பணியாற்றிய போது, முகாம் யானைகளை பராமரிப்பது, அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது, வனப்பகுதியில் இருந்து பிடித்து வரப்படும் காட்டு யானைகளை பராமரிப்பது என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். மேலும், முதுமலை சுற்று வட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது, இறந்த வன விலங்குகளை உடற்கூறாய்வு செய்வது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில்,அவர் கடந்த மாதம் பணியிட மாறுதல் பெற்று திருப்பூர் சென்றார். அதன் பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முதுமலையில் கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் வளர்ப்பு யானைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய்வாய்ப்படும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்நடை மருத்துவர்கள் அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. குறிப்பாக, கூடலூரில் உடலில் காயங்களுடன் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, கூடலூரில் காலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால், 8 நாட்களுக்கு பிறகே அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எதிர்காலத்தில் இதுபோன்ற முரண்பாடுகளைக் களைய முதுமலை பகுதிக்கு கால்நடை மருத்துவரை விரைந்து பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...