கோவை குளங்களில் குவிகிறது குப்பை: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம்

கோவை: கோவை மாநகரில் உள்ள எட்டு குளங்களும், கட்டிடக் கழிவுகளாலும் காலாவதியான மருத்துவக் கழிவுகளாலும் நிறைந்து வருகின்றன. குளத்தில் கழிவுகளை கொட்டும் நபர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவை: கோவை மாநகரில் உள்ள எட்டு குளங்களும், கட்டிடக் கழிவுகளாலும் காலாவதியான மருத்துவக் கழிவுகளாலும் நிறைந்து வருகின்றன. குளத்தில் கழிவுகளை கொட்டும் நபர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்குளத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி பிளாஸ்டிக் வயர்கள் மற்றும் ரசாயன கழிவுகளை குளக்கரையில் சிலர் எரித்தனர். அவர்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி காலாவதியான மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்ற 'நியூ ஜெயா பார்மசி' என்ற மருந்தகத்தின் உரிமையாளரை கையும் களவுமாக பிடித்த தன்னார்வலர்கள், அது தொடர்பாக மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தனர்.



மேலும், கடந்த வாரம் நொய்யல் ஆற்றில் காலாவதியான உணவுப் பொருட்களை கொட்டிய நபரை பிடித்து பொதுப் பணித்துறை வசம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மீது பொதுப் பணித்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டன், கூறுகையில், "கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் குளத்தை மாசுபடுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லையென்றால் என்ன செய்வது? ஒவ்வொரு புகாரையும் உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றால் மட்டும் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இல்லையென்றால் நடவடிக்கைகள் இல்லை. பொது சொத்தை சேதம் செய்யும் நபர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். அல்லது, சிறை தண்டனை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் நீர் நிலைகள் நம் கண் முன்னே அழிந்து போகும் அப்பாயம் உள்ளது." என்றார்.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...