காட்டுத் தீ குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத்துறை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர். 

நேற்று வனப் பகுதிக்கு அருகே வரும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த வனத்துறை அதிகாரிகள் வறட்சியான காலத்தில் வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் குப்பைகளை போடா வேண்டாம் என அறிவுறுத்தினர். 



"வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அங்குள்ள புதர்களை சுத்தப்படுத்த நினைத்தால் வனத்துறைக்கு முதலில் தகவல் கொடுங்கள்" என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், வனப் பகுதிக்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்றும், ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களிடையே தெரிவித்தனர்.

வனத் தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0425-4297115, 94435-39191, 97861-12717.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...