உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து உயிரிழக்கும் புள்ளி மான்கள்

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்தது. 

நீலகிரி, கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகள், அடிக்கடி சாலைகளில் வந்து செல்வதும், அவ்வப்போது, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகிக் கொண்டே செல்கின்றன. விலங்குகள் உயிரிழப்பை தடுப்பதற்காக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சாலைகளில் உணவுப் பொருட்களை வீச வேண்டாம், அதிவேகமாக வாகனங்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -  உதகை சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார் மானின் உடலை அப்புறப்படுத்தினர். கடந்த சனிக்கிழமை புள்ளி மான் ஒன்று வாகனத்தில் மோதி உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிப்பது வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...