பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி : ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை : சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை : சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சேப்பாக்கம் மைதானத்தில் நுழைய ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளன. மேலும், தமிழகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பை மீறி போட்டியை நடத்தினால் மைதானத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ளனர். மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை வலியுறுத்தி ஐ.பி.எல்., போட்டிகளில் சென்னை அணியின் வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாட வேண்டும் எனவும் ஒருதரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால், நாளை சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கான போட்டி நடைபெறுமா..? என சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, திட்டமிட்டபடி, சென்னையில் நாளை ஐ.பி.எல்., போட்டி நடக்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் யாரும் செயல்படக்கூடாது. இசைக்கருவிகள், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள், பேனர்கள், கொடிகள், பதாகைகளை, மொபைல் ஃபோன்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கறுப்பு சட்டை அணிந்து வரும் ரசிகர்களுக்கு சென்னை ஐ.பி.எல்., போட்டியைக் காண அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் ஏராளமான ரகசிய கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

நாளை (ஏப்.,10) நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்துள்ளனர். மேலும், மைதானம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...