பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை அரசு ஏற்று நடத்தக் கோரி ஊழியர்கள் வலியுறுத்தல்

கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் இயங்கி வரும் பேமலி பார் சில்ட்ரன்ஸ் அமைப்பை ஏற்று நடத்துமாறு அரசுக்கு அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் உள்ள பேமலி பார் சில்ட்ரன்ஸ் என்ற தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஒரு சாரார் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். 

அதில் கூறியிருப்பதாவது :- தனியார் தொண்டு நிறுவனத்தில் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்தத் தொண்டு நிறுவனத்திற்கு கனடாவிலிருந்து நிறுவன தலைவர் சாண்ட்ரா சிம்சன் நிதியனுப்பி வருகிறார். ஆனால், குழந்தைகள் மையத்திற்கு வரும் பணத்தை முறைகேடாக ஊழல் செய்கின்றனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையான ஊழியம் வழங்காமல், அதிகளவு பணி சுமை கொடுத்து துன்புறுத்துகின்றனர். மேலும், இந்த தொண்டு நிறுவனத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர். 

இது குறித்து அந்த அமைப்பின் பொறுப்பில் உள்ள ஜெகதீஸ்வரி, கலைசெல்வி ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அங்கு 68 பேர் பல்வேறு பணிகளில் வேலை செய்து வருகின்றனர். குழந்தைகளைக் கவனிக்க 2 செவிலியர்கள் மற்றும் மருத்துவர் இருக்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு இதேபோல் ஊழியர்கள் குற்றசாட்டு எழுப்பியபோது, பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை," எனத் தெரிவித்தனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...