தமிழர்களுக்கு ஆதரவாக தோனி கருப்பு பேட்ச் அணிந்து விளையாடலாம் - நடிகர் சிம்பு

சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கருப்பு பேட்ச் அணிந்து ஐ.பி.எல் விளையாட்டை விளையாடலாம் என்று நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கருப்பு பேட்ச் அணிந்து ஐ.பி.எல் விளையாட்டை விளையாடலாம் என்று நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக திரை உலகினர் இன்று ஒரு நாள் மவுன போராட்டம் நடத்தினர். இதில் முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது தந்தை டி.ராஜேந்தர் கலந்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தையும் சிம்பு அறிவித்துள்ளார். 

இது குறித்து சிம்பு கூறுகையில், "மவுன போராட்டம் செய்வதில் எந்த விதமான உடன்பாடும் இல்லாததால் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. சினிமா பிரச்சனைகளுக்கே தீர்வு காணவில்லை அதற்குள் நடிகர்கள் காவிரி பிரச்சனைக்கு களமிறங்கிவிட்டார்கள். காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். 

இதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள் யாரும் நமக்கு தண்ணீர் வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். மேலும், காவிரிக்காக ஐ.பி.எல் போட்டியை தடை செய்ய கூடாது. இப்போது தான் சென்னை அணி மீண்டும் வந்துள்ளது. ஆனால், சென்னை அணி வீரர்கள் நமக்கு ஆதரவு அளிக்கலாம். கிரிக்கெட் வீரர் தோனி கருப்பு பேட்ச் அணிந்து விளையாடலாம். இல்லையென்றால் தமிழர்களை மைதானத்திற்குள் அனுமதிக்க வேண்டும். மீதி விஷயத்தை தமிழர்கள் பார்த்துக் கொள்வார்கள். " என்று விளக்கமளித்துள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...