கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் விபத்துக்கள் : போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா?

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர்.

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர். 



36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை , வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த மலைப்பாதையில் முதல் மற்றும் இரண்டாவது கியரில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் ஆங்காகே வைக்கப்பட்டிருந்தாலும், அதை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள் அதிக வேகத்திலேயே வாகனங்களை இயக்குகின்றனர்.

இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிர்கள் பலியாகவதும், படுகாயங்கள் அடைவதும் வாடிக்கையாக உள்ளது. வாகன விபத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே வாகன விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...