மான் வேட்டையாடிய வழக்கு: சால்மான்கானுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தடை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தடை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

ராஜஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பரில் ''ஹம் சாத் ஹம் சாத் ஹயெ்ன்'' என்ற இந்தி படப்பிடிப்பு நடந்தது. அப்போது, பகாவாத் வனப்பகுதியில்,சிங்காரா, பிளாக்பெக் போன்ற அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் உள்ளிட்டோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சல்மான்கான் உள்ளிட்ட 7 பேருக்கு ஜோத்பூர் கிளை நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், சல்மான்கானை விடுதலை செய்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு சல்மான்கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றம், சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து, அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சல்மான்கான் தரப்பில் ஜாமீன் கோரி ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி முன்பு நேற்று (ஏப்.,6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதத்துக்குப் பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சல்மான்கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...