திருப்பதி சோதனைச் சாவடியில் கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி பறிமுதல்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையின் போது கோவையைச் சேர்ந்தவரிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமலையில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் வளாகத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும், மது அருந்திச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை திருப்பதி மலைப் பாதையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையைச் சேர்ந்தவரிடம் துப்பாக்கி இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 9 எம்.எம். ரக துப்பாக்கி மற்றும் 40 குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். 

பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி வைத்திருந்தவரின் பெயர் தீபக் மிஸ்ரா, அவர் கோவைபுதூரைச் சேர்ந்தவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. கோவையில் அவர் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதும், உரிமம் பெற்றே துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, திருப்பதி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்படைக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தானேவைச் சேர்ந்த ஒருவர் குண்டுகளுடன் கூடிய துப்பாக்கி வைத்திருந்த நபரைப் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...