வால்பாறையில் ஆட்டைக் கொன்ற சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் பீதி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் குட்டியிட்டு 3 தினங்களே ஆன ஆட்டை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதியில் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைப் புலியின் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடுமலை எஸ்டேட்டில் சைதுல் என்ற 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கிக் கொன்றது. இந்த பீதியிலிருந்து மக்கள் மீண்டு வருவற்குள் சிறுத்தைப்புலி மீண்டும் வால்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் குடியிருந்து வரும் தேவசி என்பவரது வீட்டின் மாடியில் நுழைந்த சிறுத்தைப்புலி அவர் வளர்த்து வந்த நாயை பிடித்துச் சென்றது.

அதேபோல, இன்று அதிகாலை வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டோபி காலனிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி, வெள்ளிங்கிரி என்பவர் வளர்த்து வந்த ஆட்டின் கழுத்தில் கடித்துக் கொன்றது. இந்த ஆடு குட்டியிட்டு 3 தினங்களே ஆகிறது. அந்தக் குட்டியும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளது.



மேலும், வால்பாறை கலைஞர் நகர் பகுதியில் நேற்று இரவு சிறுத்தைப்புலியின் நடமாட்டம் அங்கு வைக்கப்பட்டிருக்கும் சி.சி.டி.வி.இ கேமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு வால்பாறை நகருக்குள் தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டம் காணப்படுவதால் வனத்துறையினர் உடனடியாக கூண்டு அதனைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...