காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகம் : தமிழிசை

நீலகிரி : காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகமாடுவதாகப் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : காவிரி விவகாரத்தில் போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க., தி.மு.க. நாடகமாடுவதாகப் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க., பூத் கமிட்டி கூட்டம் உதகையில் உள்ள இளம்படுகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நீலகிரி வருகை புரிந்தார். அப்போது, அவருக்குப் படுகர் இன பாரம்பரிய முறைப்படி தலையில் ‘முண்டு கட்டி’ (வெள்ளை நிற துண்டு) வரவேற்பு அளிக்கப்பட்டது. 



அப்போது, அவர் பேசுகையில், "50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் காவிரி பிரச்சினையை விட்டுவிட்டு, தற்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இப்பிரச்சினையில் 50 ஆண்டுகளாக அக்கறை காட்டவில்லை. ஆனால், பா.ஜ.க., 5 வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும். நிரந்தர தீர்விற்காகவே, சில வாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட பாஜக., விடாது. அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதேபோல, தமிழகத்தில் நியுட்ரினோ திட்டம் கொண்டு வருவது நல்லது. தேனி மாவட்ட மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதை ஒப்புக் கொள்கிறோம். அதனை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் 5,000 முதல் 10,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த பொதுத்துறை நிறுவனமான எச்.பி.எப்., தொழிற்சாலை மூடப்பட்டது. மீண்டும் இங்கு 5,000 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், தொழிற்சாலை அமைக்கப்படும். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலான தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு கூறினார். 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...