தமிழ்நாடு மத்திய பல்கலை., கேண்டீனில் தடை செய்யப்பட்ட நச்சுப் பொருள் பறிமுதல்

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருளை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருளை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய அரசு சார்பில் செயல்பட்டு வரும் 7 பல்கலைக்கழகங்களில், திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று. 

இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தின் கேண்டீனில், மாணவர்கள் உணவு கொள்வது வழக்கம். இந்த நிலையில், தமிழக விடுதி உணவு சங்க உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்தின் கேண்டீனில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட நச்சுத் தன்மை வாய்ந்த மோனோ சோடியம் குளுடமேட் என்ற கெமிக்கல் பவுடரின் 8 பாக்கெட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது உணவுப் பொருட்களின் சுவையை மிகைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. 



இது தொடர்பாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் கூறும்போது, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இருக்கும் கேண்டின் நிர்வாகம், மாணவர்களுக்கு கெமிக்கல் இல்லாத உணவுகளே வழங்கப்படுவதாக உத்தரவாதம் கொடுத்திருந்தாலும், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன," எனக் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள இந்தக் கேண்டினில் சுகாதாரமற்ற உணவுகளையே வழங்கப்படுவதாக பலமுறை புகார் அளித்தும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

ஏற்கனவே, மேகியில் நச்சுத் தன்மை மிகுந்த எம்.எஸ்.ஜி., என்ற வேதிப் பொருள் அதிகம் இருந்ததால், அதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...