கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவையில் 180-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு சார்பாக கோவையில் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் இன்று 180-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளது.
காலை 5 மணி முதல் மதியம் மதியம் 1 மணி வரை கடையடைப்பு இருக்கும் என்று ஹோட்டலியர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட அந்த அமைப்பின் செயலாளர் ஆர்.பாலசந்தர் கூறுகையில், "விவசாயிகளிடம் பொருட்களை பெற்று தான் உணவு விடுதிகள் செயல்படுகின்றன. விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாங்கள் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்துகிறோம். விவசாயம் இல்லாமல் விவசாய சார்ந்த காய்கறிகள், அரிசி போன்ற பொருட்கள் விலையேறினால் உணவுகளின் விலையும் அதிகரிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
இந்த போராட்டம் காரணமாக வெளியூர்களில் இருந்து கோவை வருபவர்கள் மற்றும் கோவையில் பணி புரிபவர்கள் காலை உணவுக்காக சிரமப்பட்டனர்.