மதுக்கரை மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக் கோரி நிர்பந்திப்பாக வியாபாரிகள் புகார்

கோவை: தனி நபரின் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திப்பதாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை: தனி நபரின் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திப்பதாக வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். 



கோவை மதுக்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட மதுக்கரை மார்கெட்டில் வாரம்தோறும் 500-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வியாபாரிகள் ஒன்று கூடி, மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தாங்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாரியம்மன் கோவில் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது தனி நபர் தூண்டுதலால் மதுக்கரை வார சந்தையைப் பகுதிக்கு மாற்று இடம் தேர்வு செய்ய போலீசார் நிர்பந்திக்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், தற்போதைய இடத்தை மாற்ற வேறு இடம் செல்லுமாறு நிர்பந்திப்பதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதுடன், வியாபாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்போது உள்ள இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...