கோவை: இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்ப பெறக் கோரி கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி எம்.பி.பி.எஸ் படித்தால் மட்டும் தான் அலோபதி மருத்துவ சிகிச்சை அளிக்க முடியும். மசோதாவின் படி, சித்தா, ஆயுர்வேதம் பயின்றவர்களும் தனி கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு எந்த வித தேர்வுமின்றி அலோபதி மருத்துவர்களாக செயல்படலாம்.
மத்திய அரசின் இந்த செயல்பாட்டுக்கு மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.தேசிய மருத்துவ ஆணையத்தில் உள்ள சில சரத்துகளை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர். ரவிசங்கர் கூறுகையில், "மருத்துவ துறையில் முன்னேறி வரும் இந்தியாவில் மாற்று மருத்துவர்களை அலோபதி மருத்துவர்களாக்கும் முயற்சி தவறான முன்னுதாரணமாக உள்ளது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் அரசின் தவறான இந்த கொள்கையை அமல்படுத்த நாங்கள் விடமாட்டோம்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைத்தால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும். இதனால் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் இடையூறுகள் ஏற்படும். எங்களின் நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்." என்றார்.