கோவைச் சேர்ந்த மாணவர் மேற்கு இந்திய தீவில் உயிரிழப்பு

கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவை: மேற்கு இந்திய தீவில் மருத்துவம் பயின்று வந்த அன்னூரை சேர்ந்த மாணவர் உட்பட மூவர் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் புவன கங்காதரன். இவர் மேற்கு இந்திய தீவில் செயின்ட் லூயிஸ் நகரில் பார்டன் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். இந்நிலையில் நேற்று புவன கங்காதரன் அவரது நண்பர்களான பெங்களூரை சேர்ந்த இந்துமதி மற்றும் சேலத்தை சேர்ந்த பூபதி ஆகியோருடன் அந்நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றார்.

அங்கு கடற்கரை ஒட்டியுள்ள பாறை மீது ஏறி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கடல் அலை மூவரையும் இழுத்துச் சென்றது. இதில் மூவரும் உயிரிழந்தனர்.

அன்னூரில் உள்ள புவன கங்காதரன் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் இந்தியா கொண்டுவராமல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய தூதரகம் மூலம் தங்களது மகனின் உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டுவர இந்திய அரசும், தமிழக அரசும் உதவ வேண்டும் என அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...