மதநீர் சுரந்ததால் கும்கி யானைகள் முகாம்களுக்கு திரும்புவதில் தாமதம்

கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் சாடிவாயல் யானைகள் முகாமில் பயிற்சி பெற்று வந்த இரு கும்கி யானைகள் அதன் இருப்பிடத்திற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பாரி (37), சுஜய் (45) ஆகிய யானைகள் கும்கிளாக தங்களது சேவையைச் செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, இரு யானைகளும் ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இதனிடையே, கோவை மாவட்டம் சாடிவயலில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் பாரி மற்றும் சுஜய் உள்ளிட்ட பல்வேறு யானைகள் கலந்து கொண்டன. 48 நாட்கள் பயிற்சி முகாம் கடந்த புதன்கிழமையே முடிவடைந்தது. இதில், கலந்து கொண்ட யானைகள், அவற்றின் இருப்பிடத்திற்கு திரும்பிய நிலையில், நேற்று கும்கி யானை பாரி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது, பாரிக்கு மதநீர் திடீரென சுரந்தது. இதனால், அந்த யானை காப்பகத்திலேயே தங்க வைக்கப்பட்டது. மேலும், கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பிறகே, அதன் காப்பகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றொரு கும்கி யானையான சுஜய் இன்று தேக்கம்பபட்டி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே, சாடிவயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு கும்கி யானைகளுக்கு பதிலாக முதுமலையில் இருந்து சேரன் மற்றும் ஜான் ஆகிய கும்கி யானைகள் பதிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...