காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் : பிரபலங்களின் கருத்துக்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை பின்வருமாறு,  

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான  தீர்வாக இருக்க முடியும். காவிரி விவகாரத்தில் நீதி கிடைக்கும் என உண்மையாக நம்புகிறேன். என்றார்.

துரைமுருகன் (தி.மு.க.,): காவிரி விவகாரத்தில் கடைசி நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி என்ன ஆகப்போகிறது..? இவ்வாறு கூறினார்.  

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் : காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். என்றார்.  

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் : கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பின் முக்கிய பகுதிகளில் ஸ்கீம் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். எனத் தெரிவித்தார். 

குமார், அருண்மொழித்தேவன் (அ.தி.மு.க., எம்.பி.க்கள்) : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்வோம். இவ்வாறு கூறினர்.

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் : காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். என்றார். 

கவிஞர் வைரமுத்து : உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகி விடும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறினார்.  

பழ. நெடுமாறன் : தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தருவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் : ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கேடு. எனக் குறிப்பிட்டார்.  

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது. கண்காணிப்புக்குழு வேண்டுமானால் அமைக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு மத்திய பா.ஜ.க., அரசுதான். என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...