வீட்டுக்குள் குவியலாக இருந்த பாம்பு குட்டிகள் : அதிர்ச்சியில் மக்கள்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் இந்திரா இன்று வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றார்.

வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் இந்திரா இன்று வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அப்போது, அந்தப் பகுதியில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்ததால் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது தான் அது பாம்பு முட்டைகள் என்று தெரியவந்தது. 

மேலும், அதன் அருகிலேயே 70-க்கும் மேற்பட்ட பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக, தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கஜேந்திரனின் வீட்டிற்குச் சென்று பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் கைப்பற்றினர். பின்னர், அந்த பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் வனத் துறையிடம் ஒப்படைத்தனர்.​

வீட்டில் குவியலாக இருந்த பாம்புகளை பார்த்த குடியாத்தம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...