ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்., 16 வரை தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்துள்ளது. 

ஏர்செல்-மேக்சிஸ் மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட ஆணையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. எனவே, அவர் மீதான விசாரணையை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவுபடுத்தினர். ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கார்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யலாம் எனவும் பேசப்பட்டது. 

இதையடுத்து, தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. மேலும், கார்த்தியின் மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்வதற்கு மூன்று வார அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை இடைக்கால பாதுகாப்பு எதுவும் வழங்கக்கூடாது என்றும் கேட்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கார்த்தி சிதம்பத்துக்கு முன்ஜாமீன் வழங்கியதுடன், அவரை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார். விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கார்த்திக்கு நிபந்தனை விதித்த நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கு விசாரணையின்போது சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...