கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவர் மீது பெண் கண்ணீர் மல்க புகார்

கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஆதிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஆதிநாராயணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். 

கோவை டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரிடம் இருந்து 22 பவுன் நகை மற்றும் ரூ. 1.45 லட்சம் ரொக்கத்தையும் அபகரித்ததுடன், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கோவை மாநகராட்சியின் முன்னாள் தலைவரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஆதிநாராயணன் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது :- கடந்த ஓராண்டிற்கு முன்பு கோவை மாநகராட்சியின் 80-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினரும், மாநகராட்சி மத்திய மண்டல முன்னாள் தலைவருமான ஆதிநாராயணன் என்பவர் அறிமுகமானார். இளநிலை பட்டதாரியான தனக்கு மாநகராட்சியில் வேலை வாங்கித் தருகிறேன். அதுவரை தனக்கு உதவியாளராக இருக்குமாறு ஆதிநாராயணன் கூறினார். மாநகராட்சியில் தனக்கு வேலை வாங்கித் தர சிலருக்கு லஞ்சம் தர வேண்டும் எனக் கூறியதால், உதவியாளராக சேர்ந்த என்னிடம், 22 சவரன் நகை மற்றும் சுமார் ரூ. 1.45 லட்சம் ரொக்கத்தை ஆதிநாராயணன் பெற்றுக் கொண்டார். 

மேலும், ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் எனக் கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று தன்னைக் கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக உறவு கொண்டார். அதைத்தொடர்ந்து, பலமுறை தனியார் விடுதியில் அறை எடுத்து மதுபோதையில் வலுக்கட்டாயமாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என ஆதிநாராயணன் என்னை மிரட்டினார். 8 மாதங்களுக்கு முன்பு ஆதிநாராயணன் தொல்லை தாங்க முடியாமல் விஷ மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றேன். அப்போது, ஆதிநாராயணன் தன்னிடம் மன்னிப்பு கோரியதுடன், செருப்பால் தன்னை அடித்து இவ்விஷயத்தை விட்டுவிடும்படி மன்றாடினார். 

கடந்த ஆண்டு ஆதிநாராயணனால் கருவுற்றேன். பின்னர், அவரது சிபாரிசின் பேரில் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பும் செய்தேன். தன்னை மோசடி செய்த ஆதிநாராயணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்த சம்பவம் குறித்து இதுவரை கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கண்ணீர் மல்கக் கூறினார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...