கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்களால் விபத்து

கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்கள் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.

கோவை: கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்கள் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார். 

கோவை அவினாசி சாலையில் இன்று காலை கார் ஒன்று அதிவேகமாகச் சென்றது. அதில் மூன்று வாலிபர்கள் மது அருந்திக் கொண்டே வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கார் லட்சுமிமில்ஸ் சந்திப்பு பகுதியில் சென்ற போது முன்புறமாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி படுகாயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குல் சிகிச்சைக்காக அனுப்பினர்.  இந்த நேரத்தில் காரில் இருந்த இரண்டு வாலிபர்கள் தப்பியோடிய நிலையில் ஜெகன் என்ற கல்லூரி மாணவர் மட்டும் பொதுமக்களிடையே பிடிபட்டார். 

ஜெகனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தப்பியோடிய இருவரும் கரூரை சேர்ந்த அசோக் மற்றும் கோவை சேர்ந்த நந்து என்பதும், மூன்று பெரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. 

இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...