அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: மக்கள் குறை தீர்ப்பு முகாம் நாளான இன்று கோவை மாவட்ட கிணத்துக்கடவு அருகேயுள்ள மலசர்பதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் 38 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தாங்கள் வசித்து வரும் பகுதியில் குடிநீர்,சாக்கடை, கழிப்பிட வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் கூறி மனு அளித்தனர்.

அம்மனுவில், அப்பகுதியில் அமைத்து கொடுக்கப்பட்ட தெரு விளக்குகள் எரிவதில்லை என்றும், குடிநீருக்காக மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை என்றும் ஓட்டுக்காக மட்டும் தங்களை நாடி வரும் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு தங்களைப் புறக்கணிப்பதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...