உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, துணைவேந்தர் கணபதி (67), அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

70-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் விதிகளை மீறியும், லஞ்சம் வாங்கிக் கொண்டும் பணி நியமனங்கள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பேராசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...