ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பொதுமக்கள் மனு

மழை நீர் செல்லும் ஓடைப்பள்ளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: மழை நீர் செல்லும் ஓடைப்பள்ளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தொப்பம்பட்டி பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



கோவை தொப்பம்பட்டி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், "குருடிமலையில் இருந்து வரும் நீரானது கதிர்நாய்க்கன்பாளையத்தில் உள்ள கல்லணைகளில் நிரம்பி எங்கள் பகுதியில் உள்ள ஓடைப்பள்ளத்தின் வழியாக புதுப்பாளையம் அணைக்குச் சென்றடைகிறது. தற்போது இந்த ஓடையில் பெட்டிக்கடை, இறைச்சிகடை என ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 

மேலும், இறைச்சி கழிவு, குப்பைகள் என ஓடையில் கொட்டப்படுகின்றது. கழிவு நீர் சுழற்சிக்கு அமைக்கப்பட்டுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அந்த நீர் வழிந்து செல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்குத் தக்க நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...