சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி திருப்பூரில் கைது

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



திருப்பூர்: சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி நொண்டி முருகன் திருப்பூரில் சென்னை தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

சென்னை அபிராமபுரத்தை சேர்ந்தவர் நொண்டி முருகன் (எ) முருகன். அபிராமபுரம் காவல் நிலையத்தில் இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளுக்காகச் சிறை சென்றும் வந்துள்ளார். இந்நிலையில், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ளார். இதனால் அபிராம்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரைத் தேடி வந்தனர். 

இந்த நிலையில், திருப்பூர் முருகம்பாளையம் பகுதியிலுள்ள அவரது மகன் மணிகண்டன் வீட்டில் முருகன் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார் நேற்று அவரைக் கைது செய்து சென்னை அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் முருகனின் மனைவி செல்வி, போலீசார் பொய் வழக்கு போட்டு தனது கணவரை அழைத்துச் சென்றுள்ளதாகவும், தங்கள் வாழ்க்கை நிலைகுலைந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...