வெள்ளகோவில் பகுதியில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை: மருத்துவ அலுவலர்களைக் கைது செய்யக் கோரி சக ஊழியர்கள் போராட்டம்

வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.



திருப்பூர்: வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் மணிமாலா நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ அலுவலர்கள் ஏற்படுத்திய மன அழுத்தமே இதற்கு காரணம் என்றும், அவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கேயம் தாலுகா வெள்ளகோவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் செவிலியர் மணிமாலா (26). இவர் பள்ளி மாணவர்களுக்கான உடல் பரிசோதனை முகாமில் தனது மருத்துவர் சக்தி அகிலாண்டேஸ்வரியுடன் பணியாற்றி வந்தார்.

இவர்களுக்குத் தலைமை மருத்துவராகத் தமயந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு மருத்துவமனை குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் மணிமாலா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைபற்றி காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் மணிமாலாவை தற்கொலைக்குத் தள்ளிய மருத்துவ அலுவலர்கள் தமயந்தி, மற்றும் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரை கைது செய்து பணி நீக்கம் செய்யவேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து மணிமாலாவின் உறவினர்கள், தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...