திருப்பூரில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்து விபத்து: பெண்கள் இருவர் படுகாயம்

பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாறுமாறாக ஓடிய கார் குப்புற கவிழ்ந்து விபத்து! சாலையில் நடந்து சென்ற சகோதரிகள் இருவர் படுகாயம்!! குடிபோதையில் காரை ஓட்டிய நபரை பிடித்து போலீசார் விசாரணை.திருப்பூர்: பல்லடம் பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் கவிழ்ந்த விபத்தில் சாலையில் நடந்து சென்ற இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த உடுமலை சாலையில் கேத்தனூரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் சிற்றம்பலம் அருகே தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓடினர்.

இதனிடையே, சாலோயோரம் நடந்து சென்ற ஹேமலதா மற்றும் அவரது சகோதரி ரேணுகா தேவி ஆகியோர் மீது கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலேன்ஸ் மூலமாக பல்லடம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு அனுப்பி வைத்தனர். அன்கு முதலுதவிக்குப் பிறகு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.



இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கார் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கவுண்டம்பாளயத்தில் தண்ணீர் லாரி வைத்து வியாபாரம் செய்து வரும் முத்துச்சாமி என்பதும், காரை குடிபோதையில் தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. 

தொடர்ந்து, கார் ஓட்டுநர் முத்துச்சாமியை பல்லடம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...