திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச மருத்துவ முகாம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட காவல் துறையினரின் குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா இன்று தொடங்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான இலவச பொது மருத்துவ முகாமை திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் உமா தொடங்கி வைத்தார். பல்லடம் ரோட்டரி பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி கலந்து கொண்டார். 

மேலும், பல்லடம், மங்கலம், அவினாசிபாளையம், மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 7 காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.



முகாமில் கலந்து கொண்டவர்களுக்குப் பொன்னி மற்றும் ராஜேஷ்வரி ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் உடல்திறன், கண்பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுப் பரிசோதனை, எலும்பு பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி ஆலோசனை வழங்கினர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...