மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே குடிபோதையிலும் பள்ளிக்கு வருவதோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி-யை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

திருப்பூர் பெத்தி செட்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கென்னடி. இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.



இந்நிலையில், தினமும் குடி போதையில் பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய கூறுவதோடு, பள்ளி நேரத்தில் அங்குள்ள நிழற்குடையின் கீழ் போதையில் படுத்து இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணியிடம் புகார் அளித்தனர். 



இதனைத் தொடர்ந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கனகமணி மற்றும் அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் கென்னடி குடிபோதையில் இருந்ததோடு, மாணவ மாணவிகளைக் கழிவறையை சுத்தம் செய்ய கூறுவது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், " பள்ளிக்கு வந்த சிறிது நேரத்திலே பள்ளியின் வெளியில் உள்ள நிழற்குடைக்கு வந்து விடுவார். அங்கு சிகிரெட் குடித்து விட்டுப் படுத்து உறங்கி விடுவார். நாங்கள் பல முறை அவரிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை." என்றனர். 

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இவர் ஏற்கனவே பணியாற்றி வந்த இரண்டு பள்ளிகளில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அவர்களின் பெற்றோரால் தர்ம அடி கொடுக்கப்பட்டு , மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...