ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவு தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இன்று திறந்து வைத்தார்.


கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இன்று திறந்து வைத்தார். 



ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை அளிக்கும் விதமாக, 10 மாடி கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



10 மாடிகளைக் கொண்ட இந்தப் புதிய கட்டடத்தில் ஜிஇ ஹெல்த்கேர் நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மருத்துவ கருவிகள் உள்ளன. நோயாளிகளின் வசதிக்காக நாட்டிலேயே மிக துல்லியமான முடிவுகளைக் காட்டும் இந்தக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 7 அதிநவீன அறுவை சிகிச்சை மையங்கள், 6 படுக்கை வசதிகள் கொண்ட மூன்று பிரசவ அறைகள், 11 பெட் ஐ.சி.யு மற்றும் 16 படுக்கை பி.ஐ.சி.யு./ என்.ஐ.சி.யு. 95 அறைகள், 20 சொகுசு அறைகள் 82 மருத்துவர்களுக்கான மருத்துவ ஆலோசனை அறைகள், அல்ட்ரா சவுண்ட்ஸ், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்டெல்த் ஸ்டேஷன், டயக்னஸ்டிக் கார்டியாலஜி, வெண்டிலேட்டர்ஸ், அனஸ்தீசியா மற்றும் வார்மர் போன்றவைகள் உள்ளன. 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...