கோவையில் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரூப்- 4 வினாத்தாள்கள்

சூலூரில் உள்ள அரசு கருவூலத்தில் குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

கோவை: சூலூரில் உள்ள அரசு கருவூலத்தில் குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் நாளை குரூப் - 4 தேர்வு நடைபெற உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அந்த பகுதியில் 11 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கும் இந்த தேர்வுக்கு நேற்று மாலை வினாத்தாள்கள் சூலூர் வந்தடைந்தன. அந்த வினாத்தாள்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன. 6 மணிக்கு கருவூலத்தில் வைக்கப்பட்ட வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்தது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், இதனால் வினாத்தாள்கள் சேதப்படுத்தப் படுத்தப்படுவதற்கோ, அல்லது திருடு போவதற்கோ வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர். 

இந்த நிலையில், வினாத்தாள்களுக்கு முறையாகப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சூலூர் வட்டாட்சியர் பக்தவச்சலம் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வாளர் தங்கராஜிடம் புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...