அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு

அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் : அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவுற்றும் காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுதர  முடியவில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

தாராபுரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி  "நிரந்தரமானவர் அழிவதில்லை" என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அரசால் காவிரி தண்ணீரைத் தமிழகத்திற்கு பெற்றுத் தர முடியவில்லை. தினந்தோறும் நீர்பங்கீடு செய்யவேண்டி உச்சநீதிமன்றத்தில் அரசு சீராய்வு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களில்  துணைவேந்தர், பேராசிரியர் மற்றும் கடைநிலை ஊழியர் பதவிகள் விற்கப்படுவது தொடந்து நடைபெறுகிறது. இது தொடர்பான விசாரணையை அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்." என்றார். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...