ஊட்டியில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்ற ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: ஊட்டியில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்ற ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம்த்தில் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சுற்றுலா தலங்களை சைக்கிளில் சென்று ரசிக்கும் திட்டத்தை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ரவி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் குறிப்பாக வெளிநாட்டினரை கவரும் விதத்தில் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்கு முன்னுரிமை தரும் வெளிநாட்டினர் மலை பகுதியில் சைக்கிள் பயணம் செய்வதை பெரிதும் விரும்புவார்கள். அதனைக் கருத்தில் கொண்டு தனியார் அமைப்பு மூலம் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உதவும் வகையிலும் உடல் நலத்தை பேணி காக்கும் விதத்திலும் இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
ஊட்டியில் குவியும் வாகன நெரிசலை தடுக்கவும் சரியான நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லவும் இந்த திட்டம் பெரிதும் உதவும் என்தால் இத்திட்டம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.