குன்னூர் தனியார் எஸ்டேட்டில் குட்டி யானை பலி

நீலகிரி மாவட்டத்தில் தனியார் எஸ்டேட்டில் மர்மமான முறையில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தனியார் எஸ்டேட்டில் மர்மமான முறையில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



குன்னூர் சரகம் வண்டிசோலை பிரிவு லேம்ஸ்ராக் காவல்பகுதிக்கு உட்பட்ட சிங்காரா தனியார் தேயிலை தோட்டத்துக்கு சொந்தமான கீழ் சிங்காரா  தேயிலை தோட்டத்தில் ஆண் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது நேற்று கண்டறியப்பட்டது. மாவட்ட வனஅலுவலர் உத்தரவு படி, வனச்சரகர் பெரியசாமி தலைமையில், ஜெகதளா கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், குட்டி யானையின் உடல் உறுப்புகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகாக அனுப்பபட்டது.

வனஊழியர்கள் கூறும் போது, ‘இறந்த ஆண் குட்டி பிறந்து ஓரிரு மாதங்கள் இருக்கும். எதனால் இறந்தது என்பது குறித்து அதன் உடல் உறுப்புகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தெரிய வரும்’ என்றனர். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...