கோவையில் நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவருக்கு நீதிமன்றக் காவல்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரவீந்திரனை 22-ம் தேதி வரை காவலில் விசாரிக்க தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரவீந்திரனை 22-ம் தேதி வரை காவலில் விசாரிக்க தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த மாணவி கடந்த இரண்டு மாதங்களாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஏ.ஆர்.ஆர் என்ற மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி காலை மாணவிக்கு இரண்டு மயக்க ஊசிகளை செலுத்தி ரவீந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த உடன் பணிபுரியும் பயிற்சி செவிலியர்கள், கோவை உக்கடத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து, பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் ரவீந்திரனை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். அவர் இன்று தனிநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மருத்துவர் ரவீந்தரனுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை தனிநீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவரை போலீஸார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...