உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டை விண்ணில் ஏவியது ஸ்பேஸ்எக்ஸ் மையம்

உலகின் மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், செவ்வாய்கிரகம் வரை செல்லும் சக்தி கொண்ட ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது.


உலகின் மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றான அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், செவ்வாய்கிரகம் வரை செல்லும் சக்தி கொண்ட ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனரவால் விண்வெளி தளத்தில் இருந்து ஃபால்கன் ஹெவி ராக்கெட் ஏவப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கனவு திட்டமான இந்த ராக்கெட், இன்னும் சில வருடங்களில் நிலவுக்கும், செவ்வாய்க்கும் செல்லும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக வல்லமை கொண்டதாக கருதப்படுகிறது. ஏற்கனவே, தான் ஏவிய ராக்கெட்டை வெற்றிகரமாக தானியங்கி தொழில்நுட்பம் மூலம் தரையிறக்கி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. எனவே, ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல நவீன யுக்திகளைக் கையாண்டு வருவதால் இதன் அடுத்தகட்ட திட்டங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த ராக்கெட் வெற்றிகரமாகச் செயல்பட்டால், நாசா இதை தனது நிலவு, மற்றும் செவ்வாய் திட்டங்களுக்குப் பயன்படுத்தும் என விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த ராக்கெட், ஆற்றல் மற்றும் போக்குவரத்து தொழில்முனைவர் எலான் மஸ்க்கில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த ராக்கெட் 70 மீட்டர் (229.6 அடி) உயரமும், 12.2 மீட்டர் அகலமும் உடையதாகும். மொத்தம் 27 இன்ஜின்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளன.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...