கஞ்சா விற்பனை செய்த பெண்கள் உட்பட மூவர் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கே.வி.ஆர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மத்திய காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் அனுபல்லவி தலைமையில் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.



அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த செல்வி, சுகுணா என்ற இரு பெண்களையும் அவர்களிடம் கஞ்சா வாங்கி வேறு இடங்களில் விற்பனை செய்யும் சக்திவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த அரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட மூவரையும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...