பல்லடம் அருகே வைக்கோல் தட்டு ஏற்றிச் சென்ற லாரியில் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து வைக்கோல் தட்டுக்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பொங்கலூரை நோக்கிப் புறப்பட்டது. வண்டியை மகேந்திரன்(45) என்பவர் இயக்கி வந்தார். 



இந்த நிலையில், லாரி பொங்கலூர்- திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் இருந்த மின் கம்பியுடன் உராய்ந்து தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், காமநாய்ககன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியதில் லாரி முற்றிலுமாக எரிந்து சேதமானது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு சேதமடைந்த லாரியை அப்புறப்படுத்தினர். இந்த தீவிபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சேதமடைந்தது.

இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மின்கம்பி உரசியதால் தான் இந்த தீ விபத்து நிகழ்ந்ததா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...