தமிழக அரசைக் கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து இன்று கோவையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து இன்று கோவையில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு சமீபத்தில் பேருந்துக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசிற்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, இன்று கோவை மாவட்டம், உக்கடத்தில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் கே.எ.அப்துல் ரஹ்மான் தலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பேருந்து கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசு பேருந்து கழகத்தை நஷ்டத்தில் ஆழ்த்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மீத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு பேருந்துகளை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

இதில், துணைத் தலைவர்கள் ஆர்.ஜே.ரெஜினா, எம்.எஸ்.ஷபீர் அலி, மாநில நிர்வாகிகள் குழு உறுப்பினர்கள் இ.எம்.எஸ்.இப்ராஹிம், எஸ்.எம்.ஷாஜஷான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...